கிடுகிடுவென அதிகரிக்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.312 உயர்வு…நகை வாங்குவோர் அதிர்ச்சி..!!

7 April 2021, 1:01 pm
gold rate today - updatenews360
Quick Share

சென்னை: கடந்த சில நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.312 அதிகரித்துள்ளது.

தங்கம் விலையானது கடந்த வாரம் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இந்த வாரம் தொடர்ந்து விலை உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4297 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4258ஆக இருந்தது.

இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 39 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 34,064க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 312 உயர்ந்து ரூ. 34,376க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 69.30 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 1.20 விலை உயர்ந்து ரூ.70.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் தொடர்ந்து ஏற்றத்துடனே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்ததால் தங்கத்தின் விலை 34,000 குறைவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்ததால் தற்போது 34,000 கடந்து, தங்கத்தின் விலையானது ரூ. 34,376 விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 0

0

0