விடைபெற்ற பொங்கல் விடுமுறை.. ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்… இடம் கிடைக்காமல் அலைமோதிய பயணிகள்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2023, 8:40 pm
Railway Station Crowd- Updatenews360
Quick Share

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து மக்கள் சென்னை திரும்புவதால் நெல்லை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

தொழில் நிமித்தமாக சென்னையில் வசிக்கும் நெல்லை வாசிகள் பலர் பொங்கல் பண்டிகை விடுமுறையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறைகளுக்கு முடித்து நெல்லையில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இன்று தங்களின் குடும்பத்தினருடன் திரும்பினர். இதனால் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை வழியாக சென்னைக்கு செல்லும் ரயில்களான குருவாயூர் எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி தாம்பரம் சிறப்பு ரயில், அந்தோதியா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், நாகர்கோயில் தாம்பரம் வாராந்திர ரயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நெல்லை எக்ஸ்பிரஸ் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ,செந்தூர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி- தாம்பரம் சிறப்பு ரயில் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டன.

சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு இல்லா பெட்டிகளில் இடம்பிடிக்க மக்கள் காத்திருந்தனர்

பல ரயில்களில் இருக்க இடமில்லாமல் நின்று கொண்டும், தங்கள் உடைமைகளையும் வைத்துக் கொண்டு வாயிற் படியில் உட்கார்ந்து படி பயணிக்கும் அளவுக்கு கூட்டம் இருந்தது.

இனி வரும் பண்டிகை காலங்களில் விடுமுறை முடித்து நெல்லை போன்ற சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு முன்பதிவில்லாத ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Views: - 401

0

0