வைகை அணையில் இருந்து வரும் 4ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

1 June 2021, 11:22 am
vaigai-dam-news-updatenews360
Quick Share

சென்னை : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து வரும் 4ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பெரியாறு பிரதானக்‌ கால்வாய்‌ பாசனப்‌ பகுதி விவசாயிகளின்‌ கோரிக்கையினை ஏற்று பெரியாறு பிரதானக்‌ கால்வாய்‌ பாசனப்‌ பகுதியின்‌ கீழ்‌ உள்ள இருபோக பாசனப்‌ பகுதியில்‌ முதல்‌ போக பாசனப்‌ பரப்பான திண்டுக்கல்‌ மாவட்டம்‌, நிலக்கோட்டை வட்டத்தில்‌ 1797 ஏக்கர்‌, மதுரை மாவட்டம்‌, வாடிப்பட்டி வட்டத்தில்‌ 16,452 ஏக்கர்‌ மற்றும்‌ மதுரை வடக்கு வட்டத்தில்‌ 26,792 ஏக்கர்‌, ஆக மொத்தம்‌ 45,041 ஏக்கர்‌ நிலங்களுக்கு 04.06.2021 முதல்‌ 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து 6739 மில்லியன்‌ கனஅடி தண்ணீர்‌ திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 152

0

0