அரசு பேருந்தில் அவஸ்தை : மூதாட்டியின் அலப்பறை… பேருந்து செல்லாது என எழுதிக்கொடுக்க சொன்ன பாட்டீம்மாவின் லூட்டிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2022, 12:51 pm
Grandma - Updatenews360
Quick Share

கோவை காந்திபுரம் நகரப் பேருந்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது.

இந்த நிலையில் 50 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து பணிமனை நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து காந்திபுரம், உக்கடம், ஆத்துப்பாலம், மதுக்கரை, பாலத்துறை ஆகிய இடங்களுக்கு செல்கிறது.

இந்த நிலையில் பேருந்தில் ஏறிய மூதாட்டி பச்சாபாளையத்திற்கு வண்டியை விட வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். நடத்துனர் இந்த வாகனம் பணிமனைக்கு செல்கிறது என பலமுறை கூறியும் அநத் மூதாட்டி இறங்க மறுத்துள்ளார்.

மேலும் மூதாட்டி வண்டியை பச்சாபாளையத்துக்கு விடு என அசால்லட்டாக கூறினார். இந்த பேருந்து பச்சா பாளையம் எல்லாம் செல்லாது என்றும், தற்போது பணிமனைக்கு செல்கிறது என கூற, மூதாட்டியோ தன் கொள்கையில் இருந்து கடுகளவு கூட பின்வாங்கவில்லை.

என்ன செய்வதென்று புரியாமல் ஓட்டுநர், நடத்துநர் தவிக்க, பேருந்தில் இருந்து மூதாட்டி இறங்ககாததால், பேருந்தை இயக்காமல் அதே இடத்தில் நீண்ட நேரம் நின்றது.

வண்டியை மேற்க்கால விடு எனவும் இல்லையென்றால் இந்த பேருந்து செல்லாது என எழுதிக் கொடு என கேட்டுள்ளார். இதற்கு அந்த நடத்துனர் இப்படியெல்லாம் தொல்லை கொடுத்தால் எப்படி நாங்கள் வாகனத்தை ஓட்டுவது என வேதனை தெரிவித்து உள்ளார்.

மேலும் இலவச பயணம் வந்தாலும் வந்தது சிலர் பேருந்து தங்களுக்கு சொந்தம் என நினைத்துக் கொள்கின்றனர். அதேபோல ஓட்டுனர் நடத்துனர் தங்களுக்கு அடிமை என நினைத்து பல்வேறு பிரச்சினைகளை கையாண்டு வருகின்றனர்.

மாணவர்களின் அடிக்கடி படிக்கட்டு பயண அட்டகாசத்தை பொறுத்துக்கொள்ளும் ஓட்டுநர், நடத்துநர் இந்த பாட்டியின் அலப்பறையால் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். ஒரு கட்டத்தில் பரிதாபமாக நின்ற நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது இறக்கப்ப்டட மூதாட்டி பேருந்தில் இருந்து இறங்கி வேறு ஒரு பேருந்தில் பச்சாபாளையம் சென்றார்.

தினம் தினம் போக்குவரத்து ஊழியர்கள் எதிர்கொள்ளும் இது போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல், அரசு பேருந்தில் பிரச்சனை என்றால் உடனடியாக பேருந்து ஓட்டுநர் நடத்துநர் மீது நடவடிக்கை மேற்கொள்வது சரியா என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கேள்வியை எழுப்பி இந்த வீடியோவை சமூக வலைதளங்களல் பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 693

1

0