தேசத்துக்கு விரோதமாக செயல்பட்டு வயிற்றை கழுவணுமா : ஒன்றிய அரசு என கூறிய அதிகாரிக்கு எச்சரிக்கை விடுத்த ஹெச்.ராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
2 February 2022, 7:37 pm
H Raja - Updatenews360
Quick Share

திருச்சி : லாவண்யா விவகாரம் தமிழகத்தில் நீதி விசாரணை நேர்மையாக நடக்காது எனவே. சிபிஐக்கு மாற்றியதை வரவேற்கிறேன் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக உறுதியேற்போம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மறைந்த மருத்துவர் ஸ்ரீதர் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா, தமிழகம் பயங்கரவாத சக்திகளின் கூடாரமாக இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளை படுகொலை செய்வதற்கான திட்டங்கள் இங்கு தான் தீட்டப்படுகின்றன. எனவே, தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்வதை ஏற்க முடியாது.

பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் ‘ஒன்றிய அரசு’ என்று கூறும், சென்னையில் உயர் பதவியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியை கடுமையாக எச்சரிக்கிறேன். அவர், மத்திய அரசு அதிகாரி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களை மற்ற மாநிலங்களுக்கு மாற்றினால் அங்கு போய் இப்படி சொல்வாரா. அவர் முதுகெலும்பில்லாத அதிகாரி.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. மத்தியில் அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.

அரியலூர் மாணவி வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றியது, நீதிபதியின் பரந்த ஞானத்தை காட்டுகிறது. தமிழகத்தில் நீதி விசாரணை நேர்மையாக நடக்காது என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார் என தெரிவித்தார்.

Views: - 1159

0

0