திருவண்ணாமலையில் திக் திக்: புகைப்பட கலைஞரிடம் 980 டாலர் கேட்டு மிரட்டல்….

Author: Aarthi
4 October 2020, 3:41 pm
hacking tvmalai - updatenews360
Quick Share

திருவண்ணாமலை: கணினியை முடக்கி 980 டாலர் கேட்டு மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகைப்பட கலைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கிருஷ்ணன் தெருவில் வசிப்பவர் விஜயகுமார். இவர் போளூர் சாலையில் டிஜிட்டல் டிசைனர் கடை நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் புகார் மனுவை அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, கொரோனா ஊரடங்கு காரணமாக கடையை திறந்து, சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாததால், கணினி மூலம் போட்டோ எடிட்டிங் பணிகளை செய்து வருகிறேன். கடந்த மாதம் 29-ம் தேதி இரவு , எனது கணினிக்கு வந்த தகவலை படித்து பார்த்தபோது, கணினி ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதன்பிறகு என்னை தொடர்பு கொண்ட ஹேக்கர்கள், 72 மணி நேரத்தில் 490 டாலர் கொடுத்தால், ஹேக் செய்யப்பட்ட தரவுகளை திருப்பி கொடுப்பதாகக் கூறி மிரட்டினர். பின்னர், 72 மணி நேரத்துக்கு பிறகு 980 டாலர்கள் கொடுக்க நேரிடும் என மிரட்டுகின்றனர். இணையவழி திருட்டு கும்பலிடம் இருந்து தன்னுடைய தரவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 51

0

0