என்எல்சியிடம் நிலத்தை ஒப்படையுங்க… இனி நில உரிமையாளர்கள் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2023, 4:47 pm
NLC - Updatenews360
Quick Share

என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. பயிர்கள் வளர்ந்த நிலையில் அறுவடை நேரத்தில் என்எல்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டது விவசாயிகளை கொந்தளிக்க செய்தது. இதை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி தனது கருத்துகளை முன்வைத்தார்.

அதில், என்.எல்.சி நிறுவனம் செய்த தவறு என்னெவன்றால், இரக்கமின்றி விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டது தான்.

இதனால், பயிர்களுக்கான இழப்பீடு தொகையானது 88 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என என்.எல்.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலத்தை கையகப்படுத்திய பின் இழப்பீடு பெற்ற விவசாயிகள் அந்நியர்களாகவே கருதப்படுவர், அவர்களுக்கு அங்கு விவசாயம் செய்ய எந்த உரிமையும் இல்லை.

இருப்பினும், விவசாயிகளின் இழப்பை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அறுவடை முடித்து நிலத்தை என்.எல்.சி.யிடம் ஒப்படைக்க வேண்டும்.

தொழில், உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது. ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014ம் ஆண்டுக்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

Views: - 225

0

0