ஓட்டுப் போடுவதும், எந்த உடையை அணிய வேண்டும் என்பதும் அவரவர் உரிமை : மதுரை மேலூர் சம்பவம் குறித்து தேர்தல் ஆணையர் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 1:16 pm
Madurai Bjp Hijab - Updatenews360
Quick Share

மதுரை : ஹிஜாப் அணிந்த பெண் வாக்காளருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பாஜக முகவர் வாக்குசாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மேலூர் பகுதியில் உள்ள மேலூர் 8வது வார்டுக்கு உட்பட்ட al-ameen மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடிக்கு ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்காளர் வாக்களிக்க பாஜக பூத் கமிட்டி உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்.

பாஜக முகவருக்கு தேர்தல் அதிகாரிகள் மற்றும் அதிமுக திமுக வாக்கு சாவடி முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பாஜக பிரமுகர் கிரி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்தத விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். ஆட்சியரின் அறிக்கைப்படி பாஜக முகவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகள்,பள்ளி கல்லூரிகளில் அனுமதிக்கப்பட கூடாது என எதிர்ப்பு எழுந்து பெரும் சர்ச்சையானது. இந்த ஹிஜாப் விவகாரம் ஆந்திராவிலும் சமீபத்தில் பரவியிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஹிஜாப் அணிந்த பெண் வாக்காளருக்கு அனுமதி மறுக்கப்பட்ட முயற்சி இஸ்லாமிய பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 357

0

0