கனமழையால் குமரியில் உள்ள அணைகளில் நீர் திறப்பு : மலை கிராமங்கள் துண்டிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2021, 6:14 pm
Dm Full -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : விடிய விடிய பெய்த கனமழை பெய்து வருவதால் கோதையாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை நீடித்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து இன்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை,பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மலை கிராமங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோதையாறு, குற்றியார், மோதிரமலை உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர்.

காட்டாற்று வெள்ளத்தால் அங்குள்ள தரை பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Views: - 385

0

0