ஒப்பந்ததாரருக்கு டீசல் உயர்வு இழப்பீட்டுக்கான தொகையை வழங்குக ; கோவை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Author: Babu Lakshmanan
5 August 2023, 7:00 am
Quick Share

ஒப்பந்ததாரருக்கு கோரும் டீசல் விலை உயர்வு இழப்பீட்டை வழங்குமாறு KCP Infra Limited நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கோவை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் சேரும் திடக்கழிவுகளை டிப்பர் லாரிகள் மூலம் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை KCP Infra Limited நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இதற்கான பணிகளை கேசிபி நிறுவனத்தின் சார்பில் கே.முத்துகுமாராசாமி கவனித்து வந்தார்.

இந்த நிலையில், திடக்கழிவு தொடர்பான ஒப்பந்தம் நிறைவடைந்த பிறகும், கோவை மாநகராட்சி புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்யாததால், கேசிபி நிறுவனமே தொடர்ந்து திடக்கழிவுகளை அப்புறப்படுத்தி வந்தது. ஆனால், இதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் டீசலுக்கான விலை உயர்வு இழப்பீட்டுத் தொகையை கோவை மாநகராட்சி நிர்வாகம் விடுவிக்கவில்லை.

இதனால், ஒப்பந்தம் முடிந்த பிறகும் பணிகளை செய்த காலகட்டத்திற்கான டீசல் விலை உயர்வு இழப்பீட்டு தொகையை விடுவிக்க கோவை மாநகராட்சிக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் KCP Infra LTD சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பின் வாதங்களைக் கேட்ட நீதிபதி எஸ்.சௌந்தர், 6 வாரத்திற்குள் டீசல் விலை உயர்வு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் KCP Infra Limited நிறுவனத்திற்கு கிடைக்கும் இந்த இழப்பீடானது, மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் பணிகளை மேற்கொள்ளும் பிற ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Views: - 204

0

0