திங்கள் அன்று நல்ல செய்தி வரும் – எஸ்.பி.பி உடல்நிலை குறித்து எஸ்.பி சரண் தகவல்..!

3 September 2020, 5:09 pm
Quick Share

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து வரும் திங்கள் அன்று நல்ல செய்தி வரும் என அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 5-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி-யின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவர் மீண்டுவர வேண்டும் என திரையுலக பிரபலங்கள் மற்றும் எஸ்.பி.பி ரசிகர்கள் என ஏராளமானோர் அவருக்காக கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில், அவரின் உடல் நிலை கடந்த 4 நாட்களாக நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அளித்துள்ள எஸ்.பி.பி மகன் எஸ்.பி சரண், தந்தையின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், வரும் திங்கள் கிழமை நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால், எஸ்.பி.பி பூரணமாக குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Views: - 0

0

0