அது வந்து… அத எப்படி சொல்றது.? செய்தியாளர்கள் கேள்விக்கு மலுப்பலாக பதில் சொல்லி நழுவிய அமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2022, 9:59 pm
Anbil - Updatenews360
Quick Share

தஞ்சை மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரி குளங்களில் தண்ணீரை ஏன் நிரப்ப வில்லை என கேட்டதற்கு ஏரி குளங்களில் தண்ணீரை நிரப்பினால் அந்தப் பகுதியில் மழை பெய்யும் போது வெள்ளம் ஏற்படும் என்பதால் தான் நிரப்ப வில்லை என அமைச்சர் மலுப்பலாக பதில் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி. செழியன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்லணையிலிருந்து அணைக்கரை வரை பல்வேறு கிராமங்களுக்கு சென்று முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

50,000 மணல் மூட்டைகள் தயாராக இருப்பதாகவும் 76 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மீதமுள்ள காலி சாக்குகளிலும் மணல் மூட்டைகளை நிரப்ப உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரி குளங்களில் ஏன் தண்ணீரை நிரப்ப வில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது தற்பொழுது ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்பினால் அதிக மழை பெய்யக்கூடிய சூழ்நிலை இந்த ஆண்டு உள்ளதால் அந்த பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் என மகேஷ் பொய்யாமொழி மலுப்பலாக தெரிவித்த வீடியோ வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

Views: - 257

0

0