வேலைக்கு சென்ற மனைவியை அலுவலகத்திற்கே சென்று சரமாரியாக வெட்டிய கணவன் : காவல்நிலையத்தில் சரண்!!

25 October 2020, 4:46 pm
husband Attack Wife - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே கால் சென்டரில் பணிபுரிந்து வந்த மனைவியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய கணவர் வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் சரண் போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 5 பேரை வைத்து கால் சென்டர் மூலம் தொலைபேசி அழைப்பு வணிகம் (TELE CALLING BUSINESSES ) நடத்தி வருகிறார்.

இதில் வளத்தூர் பகுதியை சேர்ந்த மஞ்சு ரேகா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கடந்த 4 ஆண்டுகளாக கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தாய் வீட்டிலிருந்து தனது 2 குழந்தைகளை வைத்து பணி செய்து வந்த மஞ்சு ரேகாவை அவர் கணவர், கால் சென்டருக்கு சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் தலை, கை, கால்கள் மற்றும் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் தினேஷ் பாகாயம் காவல் நிலையத்தில் தானே மனைவியை சரமாரியாக வெட்டியதாக போலீசில் சரணடைந்துள்ளார். அவரிடம் பாகாயம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 16

0

0