கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த லாரி டிரைவர் விஷம் கொடுத்து கொலை : மனைவியுடன் கள்ளக்காதலன் கைது

15 September 2020, 7:33 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த லாரி டிரைவரை மதுவில் விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை ஒரே நாளில் போலீசார் கைது செய்தார்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். 40 வயதான இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முத்தாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் ஆனந்தன் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் நேற்று இரவு சத்யாவின் உறவினர் சீனிவாசன் என்பவர் ஆனந்தனுக்கு போன் செய்து திருநாவலூர் அடுத்த கெடிலத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி வீட்டில் இருந்த ஆனந்தன் இரவு சுமார் 9-மணியளவில் மதுக் கடைக்கு சென்றபோது அங்கு இருவரும் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள முட்புதரில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர்.

ஆனந்தன் போதை அதிகமானதால் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே இருந்துள்ளார். ஆனால் சீனிவாசன் அங்கிருந்து அதே இடத்தில் ஆனந்தனை விட்டு விட்டு சென்றுள்ளார். அதன்பின் ஆனந்தன் மது அருந்தி இடத்திலேயே மயக்க நிலையில், வாயில் நுரை தள்ளிய நிலையில் கடந்துள்ளார். இரவு சுமார் 10-மணி அளவில் அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து ஆனந்தனை தூக்கிக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஆனந்தன் மது போதையிலேயே உயிரிழந்தார். இதனால் சீனிவாசன் மதுவில் விஷம் கலந்து கொடுத்து ஆனந்தனை கொலை செய்திருக்கலாம் என ஆனந்தனின் சகோதரர் காசிநாதன் காளி திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் ஆனந்தனின் உடலை கைப்பற்றிய திருநாவலூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆனந்தன் மரணம் தொடர்பாக சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை பிடித்து சீனிவாசனுக்கும் ஆனந்தன் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் அதனால் திட்டமிட்டு சீனிவாசன் ஆனந்தனை வரவழைத்து மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்ட நிலையில் திருநாவலூர் போலீசார் ஆனந்தனின் மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டதில் கடந்த – 13-ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஆனந்தன் தனது ஊரிலிருந்து கிளம்பி சென்ற போது தனது நண்பர்களிடம் எனது சகலை மது அருந்த அழைப்பதாகவும் அதற்காக கெடிலம் மதுக்கடைக்கு செல்கிறேன் எனவும் கூறிச்சென்றதாக கூறியுள்ளனர். தொடர்ந்து சத்யாவிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை ஜீப்பில் அழைத்து சென்று அவரது தாய் மாமனான சீனிவாசனை அடையாளம் காட்டச் சொல்லியுள்ளனர்.

அங்கு எதுவுமே நடக்காதது போல் சர்வ சாதாரணமாக இருந்த சீனிவாசனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதோடு ஆனந்தனின் செல்போன் அழைப்பு விபரங்கனா ஆய்வு செய்து உறுபடுத்தியதை அடுத்து இருவரையும் தங்களுக்கே உரிய பாணியில் விசாரனை மேற்கொண்டதில் திருமணத்திற்கு முன்பிருந்தே தங்களுக்குள் கள்ளக் காதல் இருந்ததாகவும் ஆனந்தன் லாரி டிரைவர் என்பதால. கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் கரைக வாகனம் ஓட்டுவதற்கு சென்று விட்டு 15- நாட்களுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து விட்டு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் வேலைக்கு சென்று வாடுவார் எனவும், நாங்கள் அப்பொழுதெல்லாம் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்போம் எனவும், கொரானா ஊரடங்கால் ஆனந்தன் கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் தாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இதையடுத்து கடந்த 13-ஆம் தேதி இரவு கெடிலம் மதுபானக் கடைக்கு ஆனந்தனை வரவழைத்து முதலில் ஒரு குவாட்டர் மதுவை குடிக்கச் செய்து இரண்டாவது குவாட்டரை உடைத்து கொடுத்து குடிக்கச் செய்த சீனிவாசன் பாதி மதுவை குடித்ததும் மீதியுள்ள மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதன் பிறகும் சற்று நிதானமாக இருந்த ஆனந்தனுக்கு தன்னுடைய மதுவில் 90. மில்லி ஊற்றி கொடுத்துள்ளார். அப்போது மதுவில் கலந்த விஷம் உடலில் பரவத் தொடங்கியதும் மயங்கி விழுந்த ஆனந்தனை அவரது ஊரின் எல்லையில் உள்ள சாலைவரை தோளில் தாங்கி பிடித்தவாறு அழைத்து சென்று சிறிய பாலத்தின் மீது கிடத்தி விட்டு அருகே பாதி மதுவுள்ள குவாட்டர் பாட்டில் மாற்றும் கால் பாட்டில்களை வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் சீனுவாசன் தாங்கள் திட்டம் தீட்டி கொலை செய்தது தெரிய வந்தது குற்றத்தை ஒப்பு கொன்ட இருவரையும் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.