தீபாவளி ஸ்பெஷல்: டெல்லி செங்கோட்டை வடிவில் கட்டப்பட்ட பட்டாசு கடை…!!

29 October 2020, 1:31 pm
red fort - updatenews360
Quick Share

விருதுநகர்: வாடிக்கையாளா்களை கவரும் வகையில் வியாபாரி ஒருவர் டெல்லி செங்கோட்டை வடிவில் பட்டாசு கடை அமைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இறவார்பட்டியை சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையில் வித்தியாசமான முறையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையை போன்ற அமைப்பில் புதிய பட்டாசுக் கடையை கட்டி உள்ளார். இந்த கடை வெளியில் இருந்து பார்க்கும் வாடிக்கையாளா்களுக்கு டெல்லி செங்கோட்டையை நினைவு படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் செங்கோட்டை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பட்டாசு கடை பார்ப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் வித்தியாசமான முறையில் உள்ளதால், பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் கடையை ஆச்சரியமாக பார்ப்பதுடன், அதிக அளவில் பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

வியாபார நோக்கில் பொதுமக்களை கவரும் வண்ணம் வித்தியாசமான வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பட்டாசுக்கடை இந்தப் பகுதியில் பிரபலமாகி வருகிறது.

Views: - 22

0

0