சுற்றுலா பேருந்தின் கண்ணாடியை உடைத்து மதுபோதை ஆசாமி ரகளை : ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை… தர்ம அடி கொடுத்தத பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 11:22 am
Tourist Bus Issue - Updatenews360
Quick Share

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த குடிமகனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சுற்றுலா சென்ற சில நபர்களை திருபுவனம் செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட போது சுற்றுலா பேருந்து மீது மது போதையில் வந்த நபர் ஒருவர் நீங்கள்தானே என்னை அடித்து கீழே இறக்கி விட்டது என்று கூறி பேருந்தின் கண்ணாடியை உடைத்து உள்ளார்.

அப்போது ஓட்டுனரும் பேருந்தில் உள்ளவர்களும் நாங்கள் எப்போது உன்னை தாக்கினோம், உன்னை யார் என்றே எங்களுக்கு தெரியவில்லை என்று கூறி உள்ளனர். மது போதையில் இருந்த ஆசாமி அட்டகாசம் தாங்க முடியாமல் சரமாரியாக தர்ம அடி கொடுக்க துவங்கினர்.

பேருந்து நிலையத்தில் பிரச்சினை என்ற தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் பேருந்து நிலையம் வந்து ரகளையில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்த குடிமகனை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் அம்மா பட்டியை சேர்ந்த யூஜின் என்றும் இவர் மதுரையில் இருந்து கொடைரோடு அருகே உள்ள அம்மாபட்டி வந்துள்ளார்.

இவர் குடிபோதையில் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டதும், ஓட்டுநர் பேருந்தில் இருந்து அவரை அடித்துக் கீழே இறக்கி உள்ளனர். பின்பு அவர் அங்கிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வேறு ஒரு பேருந்தில் வந்து இறங்கி உள்ளார்.

அப்போது திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து தான் நாம் வந்த பேருந்துமு என நினைத்து கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து நகர் வடக்கு போலீசார் போதை ஆசாமி யூஜினை கைது செய்தனர்.

Views: - 558

0

0