பேருந்து நிலையத்தில் போதையில் தகராறு : பொதுமக்களை அச்சுறுத்திய பிரபல ரவுடி மீது குண்டாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2021, 4:22 pm
Cbve Rowdy Arrest - Updatenews360
Quick Share

கோவை : கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் போதையில் தகராறில் ஈடுபட்ட நபரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் 2 இளைஞா்கள் மது போதையில் தகராறில் ஈடுபட்டனா். பிறகு அதில் ஒரு நபா் அங்கிருந்தவா்களை தகாத வாா்த்தைகளால் பேசியடி, தான் வைத்திருந்த பிளேடால் மற்றொருவரை வெட்ட முயன்றாா். பின்னா் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனா்.

இதைக் கண்டு அங்கு கூடியிருந்த பெண்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதுகுறித்து காட்டூா் போலீஸ் விசாரணை செய்து தகராறில் ஈடுபட்ட தகராறில் ஈடுபட்ட பீளமேடு பகுதியைச் சோ்ந்த கபாலி என்பவரை பிடித்தனா். பிரபல ரெளடியான இவா் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து கபாலி மீது குண்டா் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

Views: - 312

0

0