இது நான்லீனியர் படமா? என்ன பண்ணி வெச்சிருக்கீங்க : விமர்சித்த ப்ளு சட்டை மாறன்.. செருப்பால் பதிலடி கொடுத்த பார்த்திபன் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 2:38 pm
Blue Sattai Maran - Updatenews360
Quick Share

இரவின் நிழல் படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மையை பார்த்திபன் ரசிகர்கள் செருப்பால் அடித்தும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வழக்கமாக ரிலீசாகும் படம் குறித்து யூடியூபில் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து விமர்சனத் முன் வைப்பார்.

ஆனால் தற்போது இரவின் நிழல் படம் குறித்து செய்த விமர்சனத்தால் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனத்தில் ‘படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். படத்திற்கு முன்பு மேக்கிங் வீடியோ என்று அரை மணிநேரம் காண்பித்திருக்கிறார்கள்.

பார்த்திபன் இதை உலகிலேயே நான்லீனியர் படம் என்று சொன்னார். ஆனால், ஏற்கனவே 2013 இல் ஈரானில் fish & cat என்ற படம் வந்து விட்டது. இரவின் நிழவை உலகிலேயே, தமிழகத்திலேயே, சினிமாவிலேயே என்று சொல்வதெல்லாம் தேவையில்லாத ஒன்று.

ஒரு இயக்குனர் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால் போதும். அதற்கு இந்த மாதிரி எல்லாம் சொல்வது அர்த்தமற்ற ஒன்று என்று படம் குறித்தும் பார்த்திபன் குறித்தும் ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ப்ளூ சட்டையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘விமர்சனங்கள் யாவும் விமோசனங்கள் என நான் நன்றியுடன் யாவும் சனங்களோ உலக level-ல் ஒன்றென உருக, நண்பர் blue sattai மாறன் அவர்களின் மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அதுசரி! எதுசரி என விளங்க. Google-ல் அவர் சொல்லும் படம் ‘non-linear’என்ற வரிசையில் இல்லை.இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை ! Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன். குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை ‘the world’s first non-linear shot movie’ என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம். 15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் spl show பார்க்க அழைத்தேன். அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்தி, மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம்(அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதயே! என்று பதிவிட்டுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் இரவின் நிழல் படத்தை பார்த்த புதுச்சேரி நடிகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பார்த்திபன் நடிகர்கள் படத்தை பார்த்து வெளியே வந்து பின்னர் ப்ளூ சட்டை மாறனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவரின் உருவ பொம்மைக்கு செலுப்பு மாலை அணிவித்து பின்னர் பொம்மையை தீயிட்டு எரித்தும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் ‘உலகின் முதல் மற்றும் சிங்கிள் அறிவுஜீவி இயக்குனர் ஆர்.பார்த்திபனின் ரசிகர்கள்.. ப்ளூ சட்டை இயக்குனர் செய்த தரமான செருப்படி சம்பவம். இனி பார்த்திபன் படங்கள் எல்லாம் ‘சூப்பர்’ என்று சொல்லி விடுங்கள். இல்லாவிட்டால் செருப்பு மாலை உறுதி.புதுமையான பாராட்டிற்கு நன்றி பார்த்திபன் சார். உங்கள் நாகரீக செயல் தொடரட்டும்.’என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 528

0

0