அடேங்கப்பா, இனி மல்லிகை பூ விலையை கேட்டீங்களா? விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

By: Udayachandran
15 October 2020, 8:15 pm
Jasmine - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 1260 ரூபாய்க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள முக்கிய நகங்களுக்கும் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்ததன் காரணமாகவும் நாளை அமாவாசை வெள்ளிக்கிழமை என்பதாலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து மல்லிகைப்பூ கிலோ 1260 ரூபாய்க்கு விற்பனையானது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டின் இன்றைய விலை நிலவரப்படி மல்லிகைப்பூ 700 முதல் 1260, முல்லை 460 முதல் 540, காக்கடா 500 முதல் 600, செண்டு 10 முதல் 25, பட்டு 41 முதல் 97, ஜாதிமல்லி 500 முதல் 600, கனகாம்பரம் 530, சம்பங்கி 90 ரூபாய் எனவும் விற்பனையானது.

Views: - 106

0

0