வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு : தமிழக அரசுக்கு KCP INFRA LIMITED நிறுவனரும், கிரஷர் மற்றும் குவாரி Welfare Association தலைவருமான K.Chandraprakash கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2023, 10:28 pm
KCPInfralimited
Quick Share

தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை 3வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

KCPInfraLimited_KCPChandraprakash

இந்த நிலையில் கோவையில் KCP INFRA LIMITED நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் , கிரஷர் மற்றும் குவாரி Welfare Association தலைவருமான கே சந்திரபிரகாஷ் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

KCPInfraLimited_KCPChandraprakash

தமிழகத்தில் நிலையான சுரங்க கொள்கையை வகுக்கவும் மற்றும் கனிம மேலாண்மை திட்டத்தை உருவாக்க கோரி அரசு மற்றும் அதிகாரிகளிடம் கிரஷர் மற்றும் குவாரி Welfare Association சார்பாக மனு அளிக்கப்பட்டது.

KCPInfraLimited_KCPChandraprakash

அதில் முக்கிய கோரிகையாக Mining Plan முறையில் உரிய Sinorage Fees செலுத்தி உற்பத்தி திறன் மற்றும் தேவைக்கு ஏற்றவாது எவ்வளவு Quantity தேவையென்றாலும் எடுக்க வழிவகை செய்ய வேண்டும் மற்றும் Mining Plan வருவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த குவாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர்.

KCPInfraLimited_KCPChandraprakash

இது தொடர்பாக கிரஷர் மற்றும் குவாரி Welfare Association சார்பாக நடந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

KCPInfraLimited_KCPChandraprakash

இதில் பங்கேற்று பேசிய KCP INFRA LIMITED நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் , கிரஷர் மற்றும் குவாரி Welfare Association தலைவருமான கே சந்திரபிரகாஷ், அனைவருக்கும்‌ எனது இனிய அன்பு கலந்த வணக்கம்‌. எங்களது அழைப்பினை ஏற்று வருகை தந்துள்ள அனைத்து பத்திரிக்கை நண்பாகளுக்கும்‌, ஒரு குடும்பம்‌ போல்‌ கூட்டாக எங்களுடன்‌ சோந்து செயல்பட்டு வரும்‌ BAI, CREDAI, CEBACA, CCCA, Cocena, Sucena, RMC Association ஆகிய சங்கங்களின்‌ நிர்வாகிகளே, எங்களின்‌ நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி
நடைபெற்று வரும்‌ வேலை நிறுத்தப்‌ போராட்டத்திற்கு, இதனால்‌ தங்களின்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ பாதிக்கப்பட்டு வரும்போதும்‌ எங்களுடன்‌ கைகோர்த்து முழுமனதுடன்‌ ஆதரவு அளித்தமைக்கு அனைத்து சங்கத்திற்கும்‌ எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

எங்களது முக்கிய கோரிக்கையே Mining Plan முறையில்‌ உரிய Sinorage Fees செலுத்தி உற்பத்தி திறன்‌ மற்றும்‌ தேவைக்கு ஏற்றவாறு எவ்வளவு Quantity வேண்டுமென்றாலும் எடுக்க வழிவகை செய்ய வேண்டும்‌. Mining Plan வருவதற்கு முன்பு நடைமுறையில்‌
இருந்த குவாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்‌.

மேலும்‌ முறையாக License எடுத்து இயங்கி வரும்‌ குவாரிகளை ஆய்வு செய்யவோ, அளக்கவோ வரும்‌ அதிகாரிகள்‌ முன்‌ அறிவிப்பு வழங்க வேண்டும்‌. மேலும்‌ முறையாக License எடுத்த குவாரிகளில்‌ அளவீடு செய்யும்போது அதிகபடியான எடூத்த அளவிற்கு உரிய Sinorage Fees செலுத்த தயாராகவே உள்ளோம்‌ Penalty இல்லாமல்‌ நடைமுறைபடுத்தி கொடுக்க வேண்டும்‌.

கடந்த ஞாயிறு (25.06.2023) அன்று எங்களது மாநில சங்க தலைவர் சின்னசாமி அண்ணன்‌, செயலாளா்‌ சென்னை ஜெயராமன்‌ அவர்கள்‌ மற்றும்‌ பொருளாளர்‌ திருப்பூர்‌ பாலசுப்பிரமணியம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்ற அனைத்து மாவட்ட கல்குவாரி சங்கங்களின்‌ கூட்டமைப்பு கூட்டம்‌ நடைபெற்றது.

இதில்‌ நாங்கள்‌ அன்றாடம்‌ சந்தித்து வரும்‌ பல விதமான சிரமங்கள்‌ மற்றும்‌ அதனை களைய தேவையான முன்னேற்பாடுகள்‌ விவாதிக்கப்பட்டது அதனை அடுத்து ஒரு மனதாக தலைவா்‌ உத்தரவுக்கு இணங்க எங்களது கோரிக்கைகளை அரசிடமும்‌ மற்றும்‌ அதிகாரிகளிடமும்‌ முன்னெடுத்து அதனை உடனடியாக பரிசீலித்து தீர்வு வழங்கவேண்டும்‌.

இந்த குவாரி தொழிலே தமிழகத்தில்‌ அழிந்துபோகும்‌ தருவாயில்‌ தற்போது உள்ள நிலையில்‌ அதனை தமிழக அரசு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ உடனடியாக பரிசீலித்து உரிய தாவு வழங்க வேண்டும்‌ அதுவரை இந்த வேலை நிறுத்தப போராட்டம்‌ தொடர்ந்து நடத்த திட்டமிட்டு திங்கள்கிழமை (26.06.2023) முதல்‌ மிகுந்த ஒற்றுமையுடன்‌ அனைவரது பங்களிப்பின்‌ மூலம்‌ நடைபெற்று வருகிறது.

KCPInfraLimited_KCPChandraprakash

விவசாயதுறைக்கு அடுத்து நாட்டின்‌ மிகமுக்கிய துறையாக விளங்குவது கட்டுமானத்துறை ஆகும்‌. அதன்‌ முதுகெழும்பாக விளங்கும்‌ குவாரி மற்றும்‌ கிரசர் துறையானது ஊயஉநச 3rd Stage-ல்‌ உள்ளது போல்‌ பாதிப்படைந்துள்ளது.

இதனை உணாந்து போர்கால அடிப்படையில்‌ அரசு மற்றும்‌ அதிகாரிகள்‌
செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்‌ தமிழகத்தின்‌ கட்டுமான வளர்ச்சி மற்றும்‌ அது சார்ந்த வேலைவாய்ப்பு வரலாற்றில்‌ இல்லாத மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும்‌.

கடைசியில்‌ தற்போது Jelly Unit‌ 3000 ரூபாயில்‌ இருந்து 10000 ரூபாய்‌ கொடுத்து பொதுமக்கள்‌ வாங்கும்‌ நிலை வெகுவிரையில்‌ வந்துவிடும்‌. இதனால்‌ நடைபெற்று வரும்‌ அனைத்து Infra மற்றும்‌ குடியிருப்பு கட்டிடங்கள்‌ விலை இருமடங்காக உயரப்போகிறது.

இந்த Strike-ன்‌ காரணமாக கட்டுமான துறையில்‌ ஏற்படும்‌ தொய்வுக்கும்‌ கட்டுமான பணியாளாகள்‌, சாலை பணியாளாகள்‌,லாரி இயக்குபவாகள்‌, Driverகள்‌ குவாரி மற்றும்‌ கிரசர் பணியாளர்கள்‌ என 33 இலட்சத்து 80 ஆயிரம்‌ பேர் வேலை இழந்துள்ளனர்‌ என்பதை மிகுந்த மனவேதனையுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌ அரசுக்கு இந்த தொழில்‌ மற்றும்‌ இது சார்ந்த தொழில்கள்‌ மூலம்‌ ஏற்படும்‌ விற்பனை வருவாய்‌ நாள்‌ ஒன்றுக்கு 1300 கோடி ரூபாய்‌ இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளாகள்‌ தினமும்‌ 15,000 பேருக்கு மேல்‌ வேலை இல்லாததால்‌ ஊர் திரும்பி வருகின்றனர்.

KCPInfraLimited_KCPChandraprakash

தமிழகம்‌ முழுவதும்‌ எங்களது சங்கத்தை சேர்ந்தவர்கள் பல தலைமுறைகளாக தொடர்ந்து கிரசர் மற்றும்‌ குவாரி தொழில்‌ செய்து வருகின்றனர். முற்போக்கு சிந்தனையுடன்‌ தமிழக அரசு பல அயல்நாடுகளில்‌ இருந்து முதலீடுகளை ஈர்த்து தொழிலதிபர்களுக்கு தொழில்‌ துவங்க உறுதுணையாக இருந்து வேலை வாயப்பை உருவாக்கி வருவது பாராட்டுக்குரியது.

இருப்பினும்‌ தாயுள்ளத்தோடு உள்ளுரில்‌ காலம்‌ காலமாக கிரசர் தொழில்‌ செய்துவரும்‌ எங்களது தொழிலையும்‌ காப்பாற்ற வேண்டுகிறோம்‌. நாங்கள்‌ சுமார்‌ 7150 நிறுவனாகள்‌ அதற்கான தொழில்‌ முதலீடூ சுமார்‌ 32000 கோடி ரூபாய்‌ ஆகும்‌. இதன்‌ மூலம்‌ நாங்கள்‌ தொழிலாளாகளுக்கு நேர்முகமாகவும்‌, மறைமுகமாகவும்‌ சுமார 30 லட்சம்‌ பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறோம்‌. இதனை மேலும்‌ விரிவடைந்து சிறப்பாக தொழில்‌ முனைய உதவ வேண்டும்‌.

Mining Plan முறையில்‌ உரிய Sinorage Fees செலுத்தி உற்பத்தி திறன்‌ மற்றும்‌ தேவைக்கு ஏற்றவாறு எவ்வளவு Quantity தேவையென்றாலும் எடுக்க வழிவகை செய்ய வேண்டும்‌. மேலும்‌ முறையாக Licence எடுத்து இயங்கி வரும்‌ குவாரிகளை ஆய்வு செய்யவோ, அளக்கவோ வரும்‌ அதிகாரிகள்‌ முன்‌ அறிவிப்பு வழங்க வேண்டும்‌.

மேலும்‌ முறையாக Licence எடுத்த குவாரிகளில்‌ அளவீடு செய்யும்போது அதிகபடியான எடுத்த அளவிற்கு உரிய Sinorage Fees செலுத்த தயாராகவே உள்ளோம். Penalty இல்லாமல்‌ நடைமுறைபடுத்தி கொடுக்க வேண்டும்‌ என அவர் கேட்டுக்கொண்டார்.

KCPInfraLimited_KCPChandraprakash

செய்தியாளர்கள் சந்திப்பின் போது துணை தலைவர் வேலுச்சாமி, Joint Secretary மைக்கேல், ஜோசப் Bai.President,ராமகிருஷ்ணன் coimbatore highway association president, சகாயராஜ் Cebaca President, ராமகிருஷ்ணன் Cocena President, குமரேசன் Sucena President. R.செல்வராஜ் c&q welfare association Coimbatore treasurer ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 298

0

0