கொடைக்கானலில் தொடங்கியது கோடை விழா மலர் கண்காட்சி… சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்ப்பு

Author: Babu Lakshmanan
24 May 2022, 12:08 pm
Quick Share

திண்டுக்கல் : கொரோனா காலம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு 59வது கோடை விழா மலர் கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் உலக சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தினமும் சுற்றுலா தலங்கள் காண்பதற்காக 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை காலங்களில் 2000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் தொற்று காரணமாக கொடைக்கானலின் கோடைவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், மீண்டும் கோடை விழா 59வது கோடை விழாவை இன்று துவங்குகிறது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தலைமையில் நடைபெறும் கோடை விழாவில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா பயணிகள் கோடை விழாவில் கலந்து கொண்டனர்.

10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் பல்வேறு வகையான மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பூக்கள் பூங்காவில் கோடை விழாவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பூங்காவில் பூக்களால் பல்வேறு அலங்கார வளைவுகள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உலகத் தரச் சான்று பெற்ற வெள்ளைப்பூண்டு, அகத்தியர், குழந்தைகளைக் கவரும் வகையில் ஸ்பைடர் மேன், கிளி சிங்கம் இந்துக் கடவுளான மாரியம்மன் உட்பட பல்வேறு மலர்களால் செய்யப்பட்ட அலங்கார வளைவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வனத் துறை சார்பாக யானை காட்டு, மாடு உட்பட பல்வேறு விலங்குகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட மலைப்பயிர்கள் வாழை மிளகு ஏலம் காபி போன்றவைகளும் ஸ்டால்களில் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சிலம்பம், கால்பந்து, கைப்பந்து, ஆக்கி உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கிராமிய கலைநிகழ்ச்சிகள் பெண்கள் ஆண்கள் கலந்து கொள்ளும் அனைத்து வகையான போட்டிகளும், அதேபோல், ஏரியில் வாத்து போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது.

Views: - 620

0

0