இது கொடைக்கானலா..? இல்ல காஷ்மீரா..? மீண்டும் தொடரும் உறைபனி.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Author: Babu Lakshmanan
18 February 2023, 9:48 am
Quick Share

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி தொடர்ந்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மாதம் கடுமையான உறை பனி நிலவி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக பனியின் தாக்கம் குறைந்து இருந்தது. இந்த வாரம் கொடைக்கானல் மலை பகுதியில் பகலில் கடும் வெயிலும் மாலை வேளையில் குளிரும் அதிகரித்து வந்தது.

இந்த சூழலில் இன்று மீண்டும் உறை பனி காணப்பட்டது. ஏரி சாலை, ஜிம்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதர்களில் பனி படர்ந்து காணப்பட்டது. மேலும், வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் கீழ் பதிவாகி உள்ளது. திடீரென மாறிய காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

சுற்றுலாவை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் வித்தியாசமான காலநிலையை ரசித்து வருகின்றனர். தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் ஜனவரி இறுதி மாதம் வரை மட்டுமே இருக்கும் உறை பனி, தற்போது பிப்ரவரி மாதத்தில் நிலவி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 377

0

0