மின் மோட்டார்களை பயன்டுத்தி குடிநீர் திருடும் கும்பல்.!!

20 May 2020, 4:38 pm
Krishnagiri Water - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : வாரம் ஒருமுறை வரும் குடிதண்ணீரை மின் மோட்டார் வைத்து சிலர் தண்ணீரை எடுத்து விடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதி 5-வது வார்டு யூசுப் தெரு, முத்தா ஜாசாகிப் தெரு ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. பொது ஊரடங்கால் பாதிக்கபட்ட ஏழை. நடுதர குடும்பங்கள் இந்த பகுதியில் வசிக்கின்றனர். தெரு பகுதியில் வரும் நகராட்ச்சி குடிதண்ணிரையே இவர்கள் நம்பி வாழ்கின்றனர்.

இந்த சூழலில் கடந்த பல மாதங்களாக. குடிதண்ணீர் வாரத்திற்க்கு ஒருமுறை அரைமணி நேரமே தண்ணீர் வருவதாகவும், அந்த தண்ணில் ஒருகுடம் நிறம்புவதற்க்குள். நின்றுவிடுவதாகவும், தெரிவிக்கின்றனர். இப்பகுதி பொதுமக்கள்.

30 -க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுதனமாக மின்மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை முழுவதுமாக எடுத்துவிடுவதாகவும், இதனால் குடிக்க தண்ணிர் கூட கிடைப்பதில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

பலமுறை இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் பொதுமக்கள்சாலை மறியல் செய்ய முற்பட்டு காவல்துறை அறிவுறுத்தலால் சாலைமறியலை கைவிட்டதாகவும் தெரிவித்தனர். எனவே நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்குசீரான குடிதண்ணீர் வழக்க கோரியும். திருட்டுமின்மோட்களை அகற்றகோரியும். கோரிக்கை வைத்துள்ளனர்.