கோவையில் குறைந்த கொரோனா பாதிப்பு : ஒருவர் பலி!!

10 November 2020, 7:33 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் இன்று புதிதாக 196 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 196 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது.

இது தவிர தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 55 வயது ஆண் உயிரிழந்தார். இதன்மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 577 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 186 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 43 ஆயிரத்து 897 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,018 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 21

0

0