70 வயதில் நடமாடும் பல்கலைக்கழகம் : மதுரை தாத்தாவால் புத்துணர்ச்சி பெற்ற புத்தகங்கள்!!

30 September 2020, 3:55 pm
Madurai Thatha - updatenews360
Quick Share

மதுரை : வீடு முழுவதும் புத்தகங்களை நிரப்பி வைத்துள்ள 70 வயது முதியவரிடம் பல்கலை மாணவர்கள் கேட்கும் புத்தகங்களை இலவமாக வழங்கி வருகிறார்.

மதுரை ஊமச்சிகுளம் 70 வயது தாத்தா முருகேசன் . வீட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை சேமித்து வைத்திருக்கும் முருகேசன் தமிழ் அறிஞர்கள், மாணவர்களுடன் புத்தகங்கள் வழியாக நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறார் .

இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள முருகேசன், ஆரம்பத்தில் பலசரக்கு , பூண்டு வியாபாரம் செய்து வந்தார். பின்னர் பழைய பேப்பர் , பத்திரிகை வியாபாரம் ஆரம்பித்த அவர், நிறைய புத்தகங்கள் சேர்க்க தொடங்கினார்.

தொடர்ந்து புத்தகங்களை படிக்க ஆரம்பித்த முருகேசனிடம், தமிழ்ப் புத்தகங்களை மாணவர்கள் விரும்பி கேட்க ஆரம்பித்தனர். தன்னிடம் இருந்த புத்தகங்களை கொடுத்த அவர், இல்லாத புத்தகங்களை தேடி வாங்கி கொடுத்துள்ளார்.

இப்படி இல்லாத புத்தகங்களை தேடி தேடி வாங்கயி அவருக்கு, தமிழ் புத்தகங்கள் மீது ஆர்வம் எழுந்தது. தமிழ் புத்தகங்கள் மீது ஈடுபாடு அதிகரித்த காரணத்தால் தனது புத்தக தேடுதலை மேலும் வளர்த்து வலு சேர்த்தார். அதன் விளைவு தற்போது அவர் வீடு முழுவதும் புத்தகம்.

இது குறித்து பேசிய அவர், புத்தகத்திற்காக யாருடனும் பணம் வாங்காமல், புத்தகத்தை பெறுபவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி, அந்த பணத்திற்கும் புத்தகம் வாங்கிக் கொள்வேன் என கூறுகிறார் நெகிழ்ச்சியாக…..

இப்படி 10 ஆயிரத்துக்கு மேல புத்தகங்கள் சேர்த்து வைத்துள்ள முருகேசனிடம், தமிழ் படிக்கும் மாணவர்கள் , அறிஞர்கள் பலர் புத்தகங்களை வாங்க முருகேசனை அணுகி வருகின்றனர். மதுரை காமராஜ் பல்கலை , தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை , காரைக்குடி அழகப்பா பல்கலை மாணவர்களும் முருகேசனை தேடி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

மனைவி இழந்த முருகேசன் தனது மூத்த மகனோட அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். இன்னமும் யார் கேட்டாலும் புத்தகம் கொண்டு போய் கொடுக்க தயாராக இருக்கேன் என்கிறார் முருகேசன். 70 வயதானாலும் வெறும் 2ஆம் வகுப்பு வரை படித்த முருகேசன் பல பேர் வாழ்க்கையில் ஒளி வீசி வருகிறார், ஓர் நடமாடும் பல்கலைக்கழகமாக……

Views: - 10

0

0