விரைவில்.. நடிப்புக்கு ‘GoodBye’ சொல்லும் மகாலட்சுமி: ரவீந்தர் போட்ட அந்த கன்டிஷன் தான் காரணமா..? ஷாக்கடைந்த ரசிகர்கள்..!

Author: Vignesh
27 September 2022, 1:28 pm
Quick Share

ரவீந்தர் சந்திரசேகரனை மணந்த மகாலட்சுமி நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் மகாலட்சுமி என தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், டிவி சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு முன்பே குழந்தை தொடர்பாக நிபந்தனை விதித்தார் மகாலட்சுமி.

முதல் திருமணம் மூலம் மகாலட்சுமிக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு குழந்தை பெற ஆசையாக இருப்பதாக ரவீந்தரிடம் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறாராம் மகாலட்சுமி. குழந்தை பிறந்த பிறகு சீரியல்களில் நடிக்காமல் தயாரிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம்.

ரவீந்தர் சந்திரசேகரன் படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் ரவீந்தரை போன்று தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் மகாலட்சுமி. ரவீந்தர் ஒரு தயாரிப்பாளராக இருப்பது தான் எனக்கு பெரிய பிரச்சனையே. அவரின் தொழிலால் தான் நான் அவரின் பணத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக விமர்சிக்கிறார்கள் என்றார்.

திருமணம் முடிந்த நாளில் இருந்து சமூக வலைதளங்களில் மகாலட்சுமி, ரவீந்தர் சந்திரசேகரன் பற்றி தான் பேச்சாக உள்ளது. மேலும் ரவீந்தரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ரவீந்தர் போஸ்ட் போட அதற்கு மகாலட்சுமி கமெண்ட் போட, ரசிகர்கள் பதிலுக்கு கமெண்ட் அடிக்கவுமாக இருக்கிறார்கள்.

Views: - 605

0

1