ஜாமீனில் வெளியான மாவோயிஸ்ட் ஷைனிக்கு தளர்வு : நீதிமன்றம் உத்தரவு!!

6 May 2021, 3:55 pm
Maoist - Updatenews360
Quick Share

கோவை : ஜாமினில் விடுவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் ஷைனிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை அருகே கருமத்தம்பட்டியில், மாவோயிஸ்ட்கள் ரூபேஷ் (வயது 48) மற்றும் அவரது மனைவி ஷைனி (வயது 45), அனுாப் (வயது 35 , கண்ணன் (வயது 48), வீரமணி (வயது 63) ஆகியோர் 2015 மே மாதம் ‘கியூ’ பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

மாவோயிஸ்ட் ஷைனி மீது தமிழகத்தில் 11 வழக்குகள் மேலும் கேரளாவில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர் பீளமேடு ‘கியூ’ பிரிவில் ஆகஸ்ட் 16 முதல் தினசரி ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் நிபந்தனையை தளர்த்தக்கோரி கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் ஷைனி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சக்திவேல் தினசரி ஆஜராக வேண்டிய நிபந்தனையில் தளர்வு அளித்து திங்கள்கிழமை மட்டும் கையெழுத்திட உத்தரவிட்டார்.

Views: - 104

0

0