“கேஜிஎஃப் 2” வின் மெகா ஹிட் பாடல்.. “மெகபூபா” வெளியானது..!

Author: Rajesh
11 May 2022, 1:11 pm
Quick Share

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கேஜிஎஃப் 2’ வசூலில் ரூ.1000 கோடி ரூபாய்யை கடந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரூ.100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து ராக்கி பாயின் ராஜாங்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தளவிற்கு, ‘அவன் கத்தி வீசின வேகத்துல புயலே உருவாகிடுச்சி சார்’ என பில்டப் காட்சிகளால் தியேட்டரையே பிளிறிடவைத்தார் பிரஷாந்த் நீல். அதற்கு இணையாக, ‘அகிலம் நீ’, ‘மெகபூபா’ பாடல்களும் இதயத்தை இனிக்க வைத்தன.

கடந்த 8 ஆம் தேதி அன்னையர் தினத்தையொட்டி ‘அகிலம் நீ’ பாடல் வெளியான நிலையில், இன்று காதலர்களிடம் மெகாஹிட் அடித்த ‘மெகபூபா’ பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. நம்ம ராக்கி பாய்க்கு வயலன்ஸ் மட்டுமல்ல ரொமான்ஸும் வரும் என்பதை நிரூபித்தது ‘மெகபூபா’ பாடல். ‘பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்’ என்பதுபோல், ‘மெகபூபா’வையும் கேட்க கேட்கத்தான் பிடித்திருந்தது. அதனால்தான். ஆடியோ வெளியானபோது சுமார் ஹிட் அடித்த பாடல், படம் வெளியானபிறகு சூப்பர் ஹிட் அடித்துது.

அதனை, உறுதிப்படுத்தும் விதமாக படம் வெளியாகி 1 மாதம் கழித்தே இன்ஸ்டா ரீல்ஸில் போட்டு ஃபீல் செய்துகொண்டிருக்கிறார்கள் காதலர்களும் ரசிகர்களும். அந்தளவிற்கு ஹிட் அடித்த ‘மெகபூபா’ பாடலை தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளது படக்குழு.

Views: - 876

21

1