பருவமழை குறைவு எதிரொலி…! முதலில் உயர்ந்து.. பின்னர் சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

11 August 2020, 1:44 pm
mettur dam-updatenews360
Quick Share

சேலம்: பருவமழை குறைவு எதிரொலியாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையானது, கடந்த வாரத்தில் தீவிரமாக இருந்தது. ஆகையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்வரத்து அதிகமானது. தொடர் நீர்வரத்து காரணமாக, காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

அதிகபட்சமாக வினாடிக்கு 1.50 லட்சம் கன அடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை எட்டியது.

பின்னர் அங்கிருந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. ஆகையால் மேட்டூர் அணைக்கு சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

இதனிடையே கர்நாடகாவில் தீவிரம் காட்டிய பருவமழை வெகுவாக  குறைந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியில் இருந்து சரிந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 95.10 அடியை எட்டி இருக்கிறது. தற்போதைய நீர்இருப்பு 58.67 டிஎம்சியாக இருக்கிறது. டெல்டா பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடி நீர் அணையில் இருந்து திறந்துவிடப்படுகிறது.

Views: - 7

0

0