80 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சியை பிடிக்க முடியாது : தி.மு.க.வின் எதிர்காலத்தை கணித்த அமைச்சர் ஜெயக்குமார்..!

10 September 2020, 7:13 pm
Jayakumar 02 updatenews360
Quick Share

சென்னை : 80 ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது என்றும், அதிமுக ஆட்சி மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சூளைப் பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- இளைஞர்களை அதிகளவில் கட்சியில் ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை. ஒவ்வொரு தொகுதியிலும் 280 வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம்.

மேலும், தற்கொலை கோழையான முடிவு. மாணவர்கள் தன்னம்பிக்கை உத்வேகத்துடன் உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். கடுமையான உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கையை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றார்.

எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து பற்றி அவர் பேசுகையில், “கட்சியும், ஆட்சியும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நரி ஏமார்ந்தது போல் தான் ஸ்டாலின் கதை சென்று கொண்டிருக்கிறது. அவர் பேச்சில் பதட்டம் உள்ளது. அது கஷ்டத்தில் தான் முடியும். மேலும், 8 ஆண்டுகள் இல்லை, 80 ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது. அதிமுக ஆட்சி மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும், என்றார்.

தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு பதிலளித்த அவர், பொதுக்குழு கூட்டம் Zoom செயலி மூலம் நடத்துவது அவர்களுக்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. அதை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

மீனவர்களை தொடர்ச்சியாக தேடிக் கொண்டிருக்கிறோம். வேறு தீவிற்கு செல்ல வாய்ப்புள்ளது. இடைப்பட்ட காலத்தில் அவர்கள் குடும்பத்தை 3 முறை நானே சந்தித்து நிவாரணம் வழங்கியுள்ளேன்.காணாமல் போன மீனவர்கள் திரும்பி வரும் வரை அவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்.

எந்த மொழியையும் திணித்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. திணிப்பை அரசு ஒருப்போதும் ஏற்காது. தமிழகத்தில் இன்றும் என்றும் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும். கொரோனா காலத்தில் இடைதேர்தல் வைத்தால் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் தான் அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு செய்யும், என்றார்.

Views: - 0

0

0