மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை.! இறப்பிலும் இணைபிரியாத ஜோடி!!
23 August 2020, 7:50 pmநாகை : சீர்காழி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). டீக்கடை வைத்து நடத்திவருகிறார். இவரது மனைவி பத்மா (வயது 40). உடல்நலக் குறைவால் தொடர் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இறந்துள்ளார்.
இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த குமார் நேற்று இரவு விஷமருந்தி உயிருக்கு போராடியுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குமார் இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவெண்காடு போலீசார் விரைந்து வந்து குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதி ந்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இறந்த தம்பதியினருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.