தென்னிந்திய படங்களின் வெற்றி வெறும் ட்ரெண்ட் தான்.. பொறாமையால் இந்தி நடிகர் கிளப்பிய சர்ச்சை பேச்சு..!

Author: Rajesh
30 April 2022, 1:57 pm
Quick Share

கடந்த சில வருடங்களாக, தென்னிந்திய திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பாகுபலி, பாகுபலி-2 திரைபடங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான புஷ்பா, கே.ஜி.எப் திரைப்டம் பாலிவுட் மட்டுமல்லாது பல மொழிகளிலும் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி பல்வேறு சினிமா துறைகளிலும் விவாதத்தைத் ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் ஆகியோர் ட்விட்டரில் இந்தி தேசிய மொழியா என்பது குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

இது தென்னிந்திய மொழிப் படங்கள் ஆதிக்கத்தின் காரணமாகவே இந்தி பிரபலங்கள் தென்னிந்திய மொழிகள் மற்றும் படங்கள் குறித்து பொறாமை உணர்வை வெளிப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வரிசையில் தான் தென்னிந்திய படங்களை பார்த்ததே இல்லை என ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் கூறியுள்ளார். இதுதான் தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நவாசுதின் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோபான்ட்டி 2 படம் திரையரங்குகளில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக அவர் தனியார் செய்தி வலைதளத்திற்கு நேற்று அவர் பேட்டியளித்தார்.
அப்போது புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்கள் சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:பொதுவாக தென்னிந்திய திரைப்படங்களை இதுவரை நான் பார்த்ததே கிடையாது. அதனால் தென்னிந்திய திரையுலகம் குறித்த கேள்விக்கு நான் பதில் கூறுவது சரியாக இருக்காது.

ஆனால், ஒரு விஷயத்தை என்னால் தெளிவாக கூற முடியும். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் சிறிது காலத்துக்கு மக்கள் அதுகுறித்தே பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதைகளின் தாக்கத்தில் பல படங்கள் வெளியாகும். இதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பட்ட மக்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒரு திரைப்படம் இருப்பதே உண்மையான வெற்றி என நான் நினைக்கிறேன். இவ்வாறு நவாசுதின் சித்திக் கூறினார்.

Views: - 754

0

0