கணவனால் தினமும் “டார்ச்சர்“ : திருமணமான 8 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை!!

1 September 2020, 10:48 am
New Bride Suicide - Updatenews360
Quick Share

வேலூர் : கணவர் தன்னை சந்தேகப்படுவதுடன் பாலியல் துன்புறுத்தல் செய்வதால் தான் தற்கொலை செய்துகொள்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு திருமணமான 8 நாட்களில் புதுமணப்பெண் தீகுளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் , ஊசூர் அருகேயுள்ள கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்த ராணு வீரரின் மகள் சந்திரலேகா. பட்டதாரியான இவருக்கும் முனைவர் பட்டம் பெற்ற காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 23 ஆம் தேதி திருமணம் நடந்தது .

இந்த நிலையில் சந்திரலேகாவின் ஆண் நண்பர் ஒருவர் சந்திரலேகா வீட்டிற்கு வந்து அவருக்கும் அவரின் கணவர் பாலாஜிக்கும் திருமண வாழ்த்துகளை கூறி சந்திரலேகாவின் நற்குணங்கள் குறித்து ஆண் நண்பர் பாலாஜியிடம் எடுத்து கூறியுள்ளார்.

இதனால் சந்திரலேகாவிற்கும் பாலாஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . இதன் பின்னர் சந்திரலேகா மீது பாலாஜி சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனது தாய் வீடான கோவிந்த ரெட்டிபாளையத்திற்கு சென்ற சந்திரலேகா அங்கு குளியலறையில் உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீ குளித்துள்ளார்.

பலத்த தீக்காயமடைந்த சந்திரலேகாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . அவரின் உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பட்டது இது குறித்து அரியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சந்திரலேகாவின் கணவர் பாலாஜியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் . திருமணமான எட்டே நாளில் பெண் தீக்குளித்து உயிரிழந்ததால் இது குறித்து வேலூர் வருவாய் கோட்டாச்சியர் கணேஷ் விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தவிட்டுள்ளார்.

அவர் கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் கணவர் தன்னை சந்தேகப்படுவதுடன் பாலியல் துன்புறுத்தல் செய்வதால் தான் தற்கொலை செய்துகொள்வதாக கூறி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கணவனின் சந்தேகப் பார்வையால் மனைவி தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.

Views: - 10

0

0