‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!

2 December 2020, 9:32 am
puyal - updatenews360
Quick Share

ராமநாதபுரம்: வங்கக்கடலில் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதால் பாம்பனில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவிலும், திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று 11 இடங்களில் புயல் முன்னெச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், புரெவி புயல் நெருங்குவதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Views: - 21

0

0