பொறம்போக்கு என சொல்லும் போது.. அந்த வலி எனக்கு மட்டும் தான் தெரியும் ; மேடையில் கண்கலங்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2024, 11:06 am
TRB Raja
Quick Share

பொறம்போக்கு என சொல்லும் போது.. அந்த வலி எனக்கு மட்டும் தான் தெரியும் ; மேடையில் கண்கலங்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா!

பட்டா இல்லாதவர்களை பொறம்போக்கு என கூறியதை கேட்கும் வலி எனக்கு மட்டும்தான் தெரியும் என முக்குளம் சாத்தனூர் பட்டாவழங்கும் விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியபோது கண்கள் கலக்கம்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் முக்குளம் சாத்தனூர், கருவாக்குறிச்சி காலனி, தளிக்கோட்டை காலனி ஆகிய 3 கிராமங்களில் 80 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருந்தது .

இதையடுத்து, கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விடுபட்ட அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா உறுதியளித்தார்.

தேர்தல் முடிந்து, மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தவுடன் இக்கோரிக்கைள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் ஆகியோரிடம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் நில சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிலங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரே பட்டா வழங்கலாம் என்று புதிய அரசாணை தமிழக அரசால் அண்மையில் வெளியிடப்பட்டது..

இதையடுத்து கருவாக்குறிச்சி காலனி, தளிக்கோட்டை காலனி ஆகிய கிராமங்களை சேர்ந்த 584 குடும்பங்களுக்கு சுமார் 450 ஏக்கர் நிலங்களை பிரித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கான விழா 8ம் தேதி முக்குலம்சாத்தனூர் பகுதியில் நடைபெற்றது. இதில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தில் அனைவருக்கும் பட்டா கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் கலைஞர் கருணாநிதிதான் .

பட்டா இல்லாத காரணத்தினால் இங்கு இருப்பவர்களை பொறம்போக்கு பொறம்போக்கு எனக்கூறியவர்கள் கேள்விபட்டு உங்களுக்கு வேண்டுமானால் சிரிப்பு வரலாம் ஆனால் அந்த வலி எனக்கு மட்டும்தான் தெரியும் ( என்று கூறியபோது கண்கலங்கிவிட்டார் ) இனி சொந்த மண்ணில் சொந்த வீட்டில் இருப்பதுதான் திராவிடமாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கின்ற மிக பெரிய வெற்றி அதுமட்டுமல்லாமல் கொடுக்கின்ற அனைத்து பட்டாக்களும் பெண்கள் கையில் கொடுத்து அழகுபார்பதுதான் திராவிடமாடல் ஆட்சி .

தேர்தல் நேரத்திற்கு பிறகு கரையை பார்த்து வேலைசெய்யும் ஆள் நானில்லை அப்படி எனது தாத்தா கலைஞர் என்னை வளர்க்கவில்லை என்றார்.

அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி அவர்களது நீண்ட ஆண்டுகால கனவினை நினைவாக்கினார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் சாருஸ்ரீ , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ,வருவாய்கோட்டாட்சியர் கீர்த்தணாமணி , ஊராட்சிமன்ற தலைவர் தேசபந்து உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Views: - 246

0

0