ஆந்திராவில் பெய்த கனமழை எதிரொலி: வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு!!

9 July 2021, 3:15 pm
Quick Share

வேலூர்: ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டியுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. மேலும், திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால், இந்த இரண்டு தண்ணீரும் சேர்ந்து வாணியம்பாடி அருகே அம்பலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அம்பலூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் பார்வையிட்டார்.

இரு கரைகளிலும் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். கனமழை காரணமாக ஜலகம் பாறை அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது.

Views: - 110

0

0