பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழா நடக்குமா..? கோவில் நிர்வாகிகளிடையே மோதல்..? குழப்பத்தில் பக்தர்கள்..!!

Author: Babu Lakshmanan
5 May 2023, 6:11 pm
Quick Share

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் போகர் ஜெயந்தி விழாவிற்கு தடையானை பிறப்பித்த கோவில் நிர்வாகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, நவராத்திரி திருவிழா, திருக்கார்த்திகை திருவிழா என மலைக்கோவில் தொன்று தொட்டு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

மேலும், போகர் ஜெயந்தி விழாவும் பழனி மலைக் கோயிலில் ஆண்டு ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. தற்போது, போகர் ஜெயந்தி விழா வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவில் நிர்வாகத்தால் போகர் ஜெயந்தி விழா நடத்த தடை ஆணையை கோவில் இணை ஆணையர் நடராஜன் வழங்கியுள்ளதாலும், அன்றைய தினம் கோவில் நிர்வாகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டும் நிர்வாகம் தரப்பில் கோரப்பட்டது.

கோவில் நிர்வாகத்தால் தடை ஆணையில் அளிக்கப்பட்டுள்ளதில் போகர் ஜெயந்தி என்ற பெயரில் புதிதாக திருவிழா 18.5.2023 நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்றும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மலைக்கோயில் அமைந்துள்ள போகர் சன்னதியில் திருக்கோவில் சொத்துகளான அருள்மிகு மரகதலிங்கம் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உள்ளிட்ட விலை உயர்ந்த விக்கிரகங்களை சன்னதி பூசரின் சுவாதீனத்தில் ஒப்படைத்து பூஜை செய்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும், ஆனால் பூசாரிகள் பணிக்கான விதிகளை மீறி திருக்கோயில் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும், ஆகம விதிகளுக்கு முரணாகவும் தன்னிச்சையாகும் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிய வருகிறது.

மலைக்கோவில் போகர் சன்னதியில் போகர் ஜெயந்தி என்ற பெயரில் திருவிழா ஏதும் நடத்தக்கூடாது என சன்னதி பூசாரி சிவானந்தம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, போகர் சன்னதி பூசர்கள் குடமுழுக்கின் போது திருக்கோயில் நிர்வாகத்தால் போகர் சன்னதில் புதுப்பித்து வரையப்பட்டிருந்த சுவர் ஓவியங்களை வெள்ளை வர்ணம் பூசி அளித்தது தொடர்பாக கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அடுத்து பெயிண்டர்கள் வரவழைத்து 1.05.23 வர்ணம் பூசி முயன்றதையடுத்து மீண்டும் அன்றைய தினமே காவல்நிலையத்தில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மேற்படி பூசகர்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு இடையூறு செய்து வருவதால் வருகின்ற 18 அன்று திருக்கோயில் நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த முகாந்திரம் உள்ளதாலும், அன்றைய தினம் பக்தர்கள் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திருக்கோயில் நிர்வாகத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், காவல்துறைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோரப்பட்டுள்ளது.

தொடர்ந்து தொன்றுதொட்டு பாரம்பரியமாக நடைபெற்று வரும் போகர் ஜெயந்தி விழாவிற்கு கோவில் நிர்வாகம் இணை ஆணையர் நடராஜன் தடை ஆணையை வழங்கி உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மத்தியில் போகர் ஜெயந்தி விழா நடைபெறுமா என்று குழப்பத்தில் உள்ளனர்.

மேலும், சமீப காலமாக கோவில் இணை ஆணையருக்கும், புலிப்பாணி ஆசிரம நிர்வாகிகளுக்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 382

0

0