சிகிச்சைக்காக விழுப்புரம் வந்த பேரறிவாளன் : பலத்த போலீஸ் பாதுகாப்பு!!!

28 November 2020, 7:07 pm
Perarivalan - Updatenews360
Quick Share

விழுப்புரம் : தனியார் மருத்துவமனைக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளன் வருகை இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள பேரறிவாளன் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த மாதம் கடந்த 7ஆம் தேதி விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்
இந்த மருத்துவமனை சேர்ந்த மருத்துவர்கள் தியாகராஜன், ரவிச்சந்திரன் ஆகியோர் அவருக்கு சிறுநீரகம் தொடர்பாக சிகிச்சை அளித்தனர். பின்னர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றால்தான் குணமடைய முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பேரறிவாளன் இன்று மாலை பேரறிவாளன் விழுப்புரம் வந்தடைந்தார். வருகையை ஒட்டி விழுப்புரம் காந்தி சிலை எதிரே உள்ள தனியார் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வந்த வாகனத்தில் பேரறிவாளன் மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.

முதற்கட்டமாக அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற இருக்கிறார். இதனால் அந்தப் பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.