இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்: தமிழக மீனவர் படுகாயம்…!!

27 October 2020, 9:57 am
srilanka - updatenews360
Quick Share

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு பகுதியில் பாரம்பரிய மீன்பிடி இடங்களில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் இலங்கை கடற்படையினரோ அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்கி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் கச்சத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் எச்சரித்து அனுப்பியது.

இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர்களை கற்களை கொண்டு தாக்கியுள்ளது இலங்கை கடற்படை. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகள், படகுகள் சேதமடைந்த நிலையில் கரை திரும்பினர்.

Views: - 27

0

0