என்னது…பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறதா?: வாகன ஓட்டிகள் கலக்கம்..!!

Author: Rajesh
7 March 2022, 8:51 am
Quick Share

சென்னை: கடந்த 123 நாட்களாகியும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் பட்ஜெட்டில் தினமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது பெட்ரோல் விலைதான். 2017ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்த பிறகு பெட்ரோல் – டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

பெட்ரோல் விலை இப்போது பல்வேறு நகரங்களில் 100 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43 ஆக உள்ளது. இன்று வரை 123 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1527

0

0