கரூரில் 4 மணி நேரமாக பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் மறியல்: செய்தியாளரை செய்தி சேகரிக்க கூடாது என மிரட்டிய திமுகவினரால் பரபரப்பு!!

Author: Rajesh
7 March 2022, 9:51 am
Quick Share

கரூர்: சுமார் 4 மணி நேரமாக கரூரிலிருந்து ஈரோடு, கோவைக்கு 4 மணி நேரமாக பேருந்து இல்லாததால் பயணிகள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அளவில் பஸ்பாடி கட்டும் தொழிலில் மட்டுமல்ல, போக்குவரத்து துறை அமைச்சர்கள் வாழ்ந்த ஊர் என்றால் மக்களிடையே கரூர் என்றுதான் சொல்வார்கள். அதிமுக ஆட்சியில் அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்பு அவரை தொடர்ந்து எம்ஆர் விஜயபாஸ்கர் என கடந்த 10 ஆண்டுகளாக தமிழக போக்குவரத்துத் துறையில் அங்கம் வகித்தவர்கள்.
இப்படி இருக்க, தமிழக அளவில் மைய மாவட்டமும், அனைத்து ஊர்களுக்கும் நகரங்களுக்கும், மாநகரங்களுக்கும் இடையே பேருந்துகள் 24 மணி நேரமும் அப்போதும் சரி இப்போதும் சரி இயங்கி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை முடித்து, திருச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, நாகர்கோயில் என்று பல்வேறு ஊர்களுக்கு பயணிகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கரூரிலிருந்து ஈரோடு மற்றும் கரூரிலிருந்து கோவைக்கும் இடையே சுமார் 4.30 மணி நேரமாக எந்த பேருந்தும் இல்லை. ஞாயிறு மாலை 6 மணி முதல், இரவு 10.30 மணி வரை எந்த வித அரசுப்பேருந்துகளும் இல்லாத நிலையில் தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆத்திரமடைந்த ஈரோடு மற்றும் கோவை செல்லும் பயணிகள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். கரூர் பேருந்து நிலையத்தின் இரண்டாவது கேட்டில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகளால் சுமார் 30 நிமிடம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கரூர் பணிமனையில் உள்ள பேருந்துகளை உடனடியாக இயக்கி பயணிகளை சமாதானப்படுத்தினர்.

Views: - 655

0

0