இன்றைக்கும் இப்படியா…112வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் ஹேப்பி..!!s

Author: Rajesh
24 February 2022, 9:07 am
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து 112வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது.

இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. இதனால், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது. இந்நிலையில், 112வது நாட்களாக இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலை நீடிக்கிறது.

இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 1604

0

0