திருச்செந்தூரில் நிரம்பி வழியும் பக்தர்கள் : குவிந்த போலீசார்.. பாதுகாப்பு குறித்து காவல் உயரதிகாரிகள் ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 3:36 pm
Police - Updatenews360
Quick Share

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆகியோர் ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழா இன்று (05.02.2023) நடைபெற்று வருகிறது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 13 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆகியோர் இன்று (05.02.2023) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருள், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு. முரளிதரன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

Views: - 346

0

0