வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டு யானை கொல்லப்பட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த தோட்ட உரிமையாளர் கைது!!

Author: Rajesh
18 April 2022, 11:16 am
Quick Share

கோவை: நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் தோட்ட வேலியில் மின்சாரம் பாய்ச்சி ஆண் யானை கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் கிராமம் வரப்பாளையம் பகுதியில் மனோகரன் நிலத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதிதோட்டத்தை சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலியில் மின்சாரத்தை பாயச்சி ஆண் காட்டு யானை கொல்லப்பட்டது.

இதுகுறித்து, வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய தோட்ட உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் ஆகியோர் தலைமறைவான நிலையில் வனத்துறை சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக பதுங்கியிருந்து நீதிமன்றங்களில் பலமுறை முன் பிணை கோரியும், நீதிமன்றங்களால் அவைகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை வந்த மனோகரன் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பன்னிமடை பேருந்து நிறுத்தம் அருகில் வைத்து வனத்துறை தனிப்படை குழுவினரால் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Views: - 691

0

0