ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி? ஊற வைத்த போது அதிர்ச்சி… முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2023, 8:22 pm
Plastic Rice -Updatenews360
Quick Share

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி? உலை வைத்த போது அதிர்ச்சி… முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோடு ரேஷன் கடையில் கலந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டது.

இந்த அரிசி வாங்கி சென்ற பொதுமக்கள் வீட்டில் அரிசி ஊற வைத்த போது அதில் ஒரு சில அரிசிகள் அப்படியே மேலே மிதந்து வந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் பிளாஸ்டிக் அரிசி என நினைத்து பதறி அடித்து கொண்டு எத்திலோடு ரேஷன் கடை முன்பு திரண்டனர்.

உடனே அங்கிருந்த விற்பனையாளர் பொதுமக்களிடம் கடந்த இரண்டு மாதங்களாக அரிசியில் செறிவு ஊட்டப்பட்ட அரிசி தான் வழங்குகிறது .அந்த அரிசியை தான் வழங்கப்பட்டது. அந்த அரிசியை சாப்பிட்டால் சற்று கூடுதலான சத்து கிடைப்பதாக மேல் அதிகாரிகள் எங்களிடம் கூறியிருந்தார்கள்.

ஆகையால் பயப்படாமல் அரிசியை கீழே போடாமல் சாப்பிடலாம் என்று கூறினார். இதனை அப்பகுதி பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாமல் முற்றுகை ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உடனடியாக இதுகுறித்து நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரியிடம் கூறப்பட்டது. உடனடியாக பொதுமக்களிடம் இதுகுறித்து அரசு தரப்பில் வழங்கப்பட்ட அரிசி தான் வழங்கப்பட்டுள்ளது அதில் சத்துக்கள் நிறைந்த அரிசியாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக இது பிளாஸ்டிக் கலந்த அரிசி அல்ல எனக்கூறி சமரசம் செய்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் வழங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்பதால் பிளாஸ்டிக் அரிசி ஆக இருக்கும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

எனவே இது குறித்து தக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அரிசியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

படவிளக்கம். பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் அரிசி எனக் கூறி பொதுமக்கள் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

Views: - 227

1

0