பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… பைக்கில் பறந்த மர்மநபர்களை துரத்திய போலீசார் : ஆட்டோவில் மோதி சிக்கிய கொள்ளையன்.. திக் திக் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2022, 9:55 pm
Chian Snatch Caught - Updatenews360
Quick Share

மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை சினிமா பாணியில் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.

மணப்பாறை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கோமலாதேவி. இவர் இன்று மாலை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.‌

மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் அருகே வரும்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கோமலாதேவி கழுத்திலிருந்த 5 சவரன் தாலி பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றவர்கள் எதிரோ வந்த ஆட்டோ மீது கீழே விழுந்தனர். ஆனால் கீழே விழுந்ததும் தப்பியோடிய போது வண்டியை ஓட்டிவந்தவர் தப்பியோடிவிட மற்றொருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பெண்ணிடம் தாலி செயினை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது ஆட்டோவில் மோதி கீழே விழுந்து எழுந்து ஓடிய ஒரு திருடனை பொதுமக்கள் துரத்தி பிடிக்கும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.

Views: - 358

0

0