காவல்துறையுடன் இணைந்த மத்திய தொழில் படை : சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்திய அணிவகுப்பு!!

1 March 2021, 8:34 pm
Police March -Updatenews360
Quick Share

கோவை : சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்தவும், தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கோவையில் காவல்துறையினருடன் இணைந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் , தேர்தல் நடத்தை விதிமுறைகள அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கோவையில் இன்று மாலை கோவை மாநகர காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

கொடி அணிவகுப்பை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் துவக்கி வைத்து, அணிவகுப்பில் கலந்து கொண்டார். கோவை கண்ணப்பன்நகரில் இருந்து பேன்டு வாத்தியங்கள் முழங்க மத்திய தொழில் பாதுகாப்பு படை , ஆயுதப்படை, கோவை மாநகர போலீசார் ஆகியோர் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி இந்த கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

சட்டமன்றதேர்தலை அமைதியாக நடத்திடவும், பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விதத்திலும் இந்த கொடி அணிவகுப்பானது நடத்தப்பட்டது.

கண்ணப்பன் நகர் பகுதியில் இருந்து புதுப்பாலம் வரை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் 150 க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். இதே போல் தினமும் கோவை நகரின் ஓவ்வொரு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட இருக்கின்றது.

இதன் மூலம் வாக்காளர்கள் அச்சமின்றி தைரியமாக வந்து வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்பதால் துப்பாக்கிகளுடன் கொடி அணிவகுப்பானது நடத்தப்படுகின்றது.

Views: - 18

0

0