தடை செய்யப்பட்ட 530 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் : ஆட்டோவுடன் 2 பேர் கைது!

16 November 2020, 4:00 pm
Tirpur Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : காவல்துறை வாகன சோதனையின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 530 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

திருப்பூர் வடக்கு காவல் துறைக்குட்பட்ட ராயபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஆட்டோவை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 530 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தங்கராஜ் மற்றும் மதன் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் புகையிலைப் பொருட்களை கொண்டு வந்த ஆட்டோவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 14

0

0