அமெரிக்கா செல்லும் ரஜினி குடும்பம்.. தனுஷ் – ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க முயற்சியா.?

Author: Rajesh
11 May 2022, 4:39 pm
Quick Share

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 169’ என பெயரிடப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமார், பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளாராம். வழக்கமாக மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினி, இம்முறை அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக செல்ல உள்ளாராம்.

மேலும் அங்குள்ள தனது நீண்டகால நண்பர்களையும், ரசிகர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ள ரஜினி, அதன்பின் இந்தியா திரும்பியதும் தலைவர் 169 பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம். நடிகர் ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும், மூத்த மகள் ஐஸ்வர்யாவும் உடன் செல்ல உள்ளார்களாம்.

இதனிடையே, தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி, ரஜினிக்கு சற்று மனகஷ்டத்தை ஏற்படுத்தியதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில், தனுஷ் விவகாரம் குறித்து தன் மகளுடன் மனம் விட்டு பேசுவதற்காகவே, இந்த அமெரிக்கா பயணம் என்று கூறப்படுகிறது. இந்த முயற்சி தான் இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி எடுக்க போகும் கடைசி முயற்சி என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Views: - 1362

3

1