நகர்புற உள்ளாட்சி தேர்தல் : கோவையில் 143 வேட்புமனுக்கள் நிராகரிப்பு…

Author: kavin kumar
5 February 2022, 10:54 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தேர்தல் விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு தக்கல் செய்யப்பட்டாத 143 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள், 7 நகராட்சிகளில் 198 வார்டுகள், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகள் சேர்த்து 811 வார்டுகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 1,130 மனுக்களும், 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளில் 2,346 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.

இதில் கோவை மாநகராட்சியில்100 வார்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட 1130 வேட்புமனுக்களில் பரிசீலனைக்கு பிறகு 86 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,044 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதே போல், கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளில் 7 நகராட்சிகளில் 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 1068 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 33 பேரூராட்சிகளில் 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 2,318 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் மொத்தமாக அளிக்கப்பட்ட 4,573 மனுக்களில் 143 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4,430 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Views: - 1044

0

0